மதுரையில் கொடிகட்டி பறக்கும் "ஆன்லைன் விபச்சாரம்" என்ற தலைப்பில் கடந்த இதழில் நாம் தக்க ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு இருந்தோம் இச் செய்தியை பார்த்த பொதுமக்களும், வியாபாரிகளும், பெரும் பண முதலைகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை பார்த்த மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் டேவிட் ஆசிர்வாதம் உடனடியாக விபச்சார கும்பலை பிடிக்க தனி படை ஒன்றை காவல் உதவி ஆணையர் ஜஸ்டின் பிரபாகரன் தலைமையில் ஆய்வாளர் ஹேமமாலா, சார்பு ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர்கள் விஜயலட்சுமி கார்த்திகாயினி, பழனிக்குமார், திருப்பதி ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து அதிரடி நடவடிக்கையில் இறங்க வைத்தார். இந்த தனி படை மதுரை முழுவதும் இரவு பகல் பாராது தூக்கமின்றி சல்லடை போட்டு தேடி விபச்சார கும்பலை சேர்ந்த 82 பேரை தனி படையினர் கைது செய்தனர்.
மேலும் இந்த கும்பலுடன் தொடர்புடைய சிலரையும் காவல்துறையினர் தேடியும் வருகிறார்களாம் இந்த விபச்சார கும்பல் பிடிபட்டதில் இவர்களிடம் நகை மற்றும் பணத்தையும் ஏமாந்த பல தொழில் அதிபர்கள் தற்போது சொல்ல முடியாத சந்தோசத்திலும் மனமகிச்சியிலும் இருக்கிறார்களாம் அது மட்டுமில்லாமல் மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் டேவிட் ஆசிர்வாதம் தனது அலுவலகத்தில் மதுரையில் உள்ள அத்துணை காவல்நிலைய இன்ஸ்பெக்டர்களையும் வரவழைத்து உங்களது பகுதியில் ஏதேனும் லாட்ஜ், வீடு , ஹோட்டல் ஆகிய இடங்களில் ஏ.சி.ஜஸ்டீன் பிரபாகரன் தலைமையில் உள்ளவர்கள் விபச்சார வழக்கில் பிடித்தால் அந்தந்த காவல் ஆய்வாளருக்கு மெமோ கொடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்
இதை பற்றி அலுவலகத்தில் உள்ள காவலரிடம் கோட்ட போது ஐயோ? சார் ஏன் கோட்கிறீர்கள் நாங்கள் எல்லாம் ஜீனீ, சினீ , வந்தால் மட்டுமே மெட்டல் டிக்டர் வைத்து வரும் ஆட்களை சோதனை செய்து அனுப்புகிறோம். ஆனால் இவர்கள் ஆன்லைனில் பெண்களின் படத்தை காட்டி அதுவும் இவர்கள் அனுப்பும் பேங்க் அக்கவுண்ட்டில் பணத்தை கட்டி அது வந்தவுடன் இவர்கள் கொடுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அந்த எண் ராஜஸ்தான் போகிறது அவன் இவரை தொடர்பு கொண்டு மதுரையில் உள்ள முக்கிய இடங்களை கூறி அங்கே நின்று தனது மொபைலில் செல்பி எடுத்து அவனுக்கு இவன் முகத்தை பதிவு செய்தவுடன் இங்கு பொறுக்கி தின்றவன் இவனை தொடர்பு கொண்டு இங்கவா, அங்கவா என அலையவிட்டு அதுக்கப்புறம் இவனை நேரில் பார்த்து கூட்டி கொண்டு போய் கூட்டி கொடுக்கிறார்கள் நாங்கள் பொறுமை இழந்து குடும்பம் குழந்தைகளை விட்டு புட்டு இரவு பகல் பாராது உழைத்ததற்கு நல்ல பலன் கிடைத்தது. இச்செயல் முழுவதற்கும் பாடுபட ஒத்துழைப்பு தந்த கமிஷ்னருக்கு தான் நன்றி கூற வேண்டும் என்றார்.
இவர் மட்டுமில்லாமல் மற்ற காவலர்களும் மதுரையில் உள்ள பொது மக்களும் பாராட்டி வருகின்றனர் நாமும் பாராட்டுவோம் இதில் எந்த ஏரியா இன்ஸ்&க்கு கமிஷ்னர் மெமோ கொடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்ப்போம்.
மதுரையில் விபச்சார கும்பலை வளைத்துப் பிடித்த மதுரை போலீஸ் கமிஷ்னர்