கட்சியை பலப்படுத்தும் அதிமுக ஒன்றிய செயலாளர்

உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் அதிமுக பலம் பெற்று விடும் என்ற நம்பிக்கையோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று பொதுமக்களிடம் வாக்குறுதி கொடுத்து வருகிறார். அதற்கு வாய்ப்பே இல்லை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்துவேன் என எதிர்கட்சி திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்னொரு பக்கம் பொது மக்களிடம் தான்  வாக்குறுதி கொடுத்து வருகிறார்.
எதிர்கட்சி திமுகவில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றிப் பெற்று விட்டால் மட்டும் போதாதுஅடுத்து எந்நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும் அதிமுகவை  அமோக வெற்றிப் பெற வைப்போம் என்ற உறுதியோடு ஆளும் கட்சியினர் தயராக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
காஞ்சி மாவட்டத்தில் திமுக தரப்பில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தால் நமக்கென்ன மாநில தேர்தல் ஆணையம் எப்பொழுது உள்ளாட்சி மன்ற தேர்தலை நடத்தினாலும் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் பதவியை அதிமுக தான் மீண்டும் கைப்பற்றும் என அக்கட்சியினர் எதிர்பார்ப்பு நமக்கு தெரிய வர ஆளும்கட்சியின் நிலவரத்தை பார்த்தோம்.
கடந்த 2011ல் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறற போது ஒன்றிய  கவுன்சிலராக வெற்றிப் பெற்ற மரகதம் குமரவேல் ஒன்றிய பெருந்தலைவர் பதவியை கைப்பற்றி அடுத்து காஞ்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர் தற்பொழுது மத்திய மாவட்ட மகளிரணி செயலாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஒன்றிய பெருந்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் என அரசு பதவியில் இருந்த மத்திய மாவட்ட மகளிரணி செயலாளராக மரகதம் குமரவேல் கட்சி பணியாற்றும் வேலையை செய்யட்டும் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் பதவியை எப்படியாவது பிடித்தே ஆக வ«ண்டும் என்று அவ் ஒன்றிய செயலாளர் முன்னாள் தையூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.குமரவேலுவின் உள்ளாட்சி தேர்தல் வியூகத்தை பார்ப்போம்.
திருப்போரூர் ஒன்றியத்திலுள்ள பேரூராட்சி ஊராட்சிகளில் பெரும்பாலும் அதிமுக சேர்ந்தவர்களை தலைவராக வெற்றிப் பெற வைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு உள்ள ஒன்றிய செயலாளர் எஸ்.குமரவேல் 24 ஒன்றிய கவுன்சிலர்களில் பெரும்பாலனாவர்களை அதிமுகவினராக வெற்றிப் பெற வைத்தால் தான் ஒன்றியப் பெருந்தலைவர் பதவியை பிடிக்க முடியும் என எதிர்பார்த்து அதற்கான வேலையை செய்து வருகிறார் என எடுத்துக் காட்டுகிறார்கள்.
மேற்காணும் திருப்போரூர் தொகுதி திமுக வசம் இருந்தாலும் ஒன்றிய பெருந்தலைவர் பதவியை பிடிக்க வேண்டும் என்ற முடிவிலுள்ள எஸ்.குமரவேல் அதிமுக தரப்பில் ஒன்றிய கவுன்சிலராக நிற்க போகும் ஊராட்சிகளில் தேர்தல் வேலை செய்வது பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பது என வலம் வருவதாக எடுத்துகாட்டுகிறார்கள்.