பொதுமக்களின் குறைகளை தீர்த்து வைக்க கூடிய ஊராட்சி செயலர் இருந்தால் பொதுமக்கள் எந்த வித தயக்கமும் இல்லாமல் கிராம சபா கூட்டங்களில் தங்களது பகுதியிலுள்ள குறைகளை முன் வந்து கூறுவார்கள்.
காஞ்சி மாவட்டம் திருப்போரூர் தொகுதி ஒன்றியத்திலுள்ள தாழம்பூர் ஊராட்சி செயலராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பணிக்கு வந்த மதன் அப்பகுதி பொதுமக்களி குறைகைளை கேட்டறிந்து தீர்த்து வருவதால் ஆக் 2ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் பி.பொன்னையன் உத்தரவின் பேரில், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்பார்வையில் நடந்த கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்ட தாழம்பூர் ஊராட்சி பொதுமக்கள் தினசரி குப்பை அள்ளுதல் குடிநீர் தட்டுப்பாடு, தெரு விளக்கு, கழிவுநீர் அகற்றுதல், மேடு பள்ளமற்ற சா£லையை சீரமைத்தல் போன்ற அடிப்படை பிரச்சனை குறித்து கோரிக்கை வைத்தனர்.
மேலும் தாழம்பூர் பகுதியில் காலியாக உள்ள வீட்டுமனை பிளாட்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருந்து லாரி மூலமாக எடுக்கப்படும் கழிவு நீரை கொண்டு வந்து கொட்டுவதால் புழு, பூச்சிகள் உருவாகி நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீரும் மாசு ஏற்பட்டு உபயோகம் இல்லாமல் உள்ளது.
தாழம்பூர் ஊராட்சி பொதுமக்களின் குறைகளை கேட்டு குறிப்பெடுத்து கொண்ட ஊராட்சி செயலர் மதன், அப்பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை தீர்த்து கொடுப்பதாக உறுதி கூறினார்.
மேலும் காலி வீட்டுமனைகளில் லாரிகள் மூலமாக கழிவு நீர் கொட்டப்படுவது குறித்த நாவலூர் காவல் நிலையத்தில் தெரியப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி கிராம சபா கூட்டத்தை நடத்தி முடித்தார்.
கழிவு நீர் லாரிகளின் அடாவடி