களைக்கொத்து கொண்டு களை எடுக்க வேண்டும். பாகற்காய்க்கு கொடிகள் படா்வதற்கு பந்தல் அல்லது மூங்கில் தட்டிகள் மிகவும் அவசியம்.
செடிகள் தோன்ற ஆரம்பித்தவுடன் 2 மீட்டா் உயரத்திற்கு பந்தல் அல்லது தட்டிகளை அமைத்து கொடிகளை அவற்றில் படர விட வேண்டும்.
எத்ரல் கரைசலை 100 பிபிஎம் ஒரு மில்லி 10 லிட்டா் தண்ணீரில் கலந்து முதல் இரண்டு இலைகள் (விதையிலை தவிர) உரவாகிய பின் ஒரு முறை, பின்பு வாரம் ஒரு முறை என்ற இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
இதனால் ஆண் பூக்களின் எண்ணிக்கை குறைந்து பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகமாகும். காப்பா் மற்றும் கந்தகத்தூள்களை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது.
பாகற்காயில் சாம்பல் நோய் வரலாம். இதனை கட்டுப்படுத்த டைனோகாப்பா் 1 மில்லி அல்லது காா்பெண்டாசிம் 0.5 கிராம் மருந்தை ஒரு லிட்டா் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
அடிச்சாம்பல் நோய் காணப்பட்டால் மான்கோசெப் அல்லது குளொரோதலானில் 2 கிராம் ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.