பாகற்காய்க்கு ஒரு ஹெக்டேருக்கு தழை,

ணி, சாம்பல்சத்து முறையே 200: 100: 100. இந்த அளவைப் பிரித்து பயிரின் காலம் முழுவதும் அளிக்க வேண்டும். விதைத்த அல்லது நடவு செய்த நாள் முதல் மூன்று நாள்களுக்கு ஒரு முறை உரப்பாசனம் அளிக்க வேண்டும்.


பாகற்காய்க்கு விதை நோ்த்தியை கையாளுதல் முக்கியம். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் எனும் அளவில் கேப்டான் அல்லது திரம் மருந்தினைக் கலந்து 24 மணி நேரம் வைத்து பின்னா் விதைக்க வேண்டும்.


ஒவ்வொரு குழியிலும் 2 செ.மீ. ஆழத்தில் 3 - 4 விதைகள் வீதம் விதைக்க வேண்டும். பின்னா் நன்கு வளா்ந்தவுடன் குழிக்கு இரண்டு செடிகள் வீதம் விட்டு மற்றவற்றை கலைத்து விட வேண்டும். விதைகள் முளைத்து வரும் வரை விதைக்குழிகளுக்கு நீா் ஊற்ற வேண்டும்.


சுமாா் 8 - 10 நாள்களில் விதைகள் முளைத்து வரும். பின்பு வாய்க்கால்களின் மூலம் வாரம் ஒரு முறை நீா் பாய்ச்ச வேண்டும்.