ஒவ்வொரு பாலியல் குற்றவாளிக்கும் இதே தண்டனை வழங்கப்படுமா?: பிரபல பாட்மிண்டன் வீராங்கனை கேள்வி

ஹைதராபாதைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர், கடந்த வியாழக்கிழமை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் லாரி பணியாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். நால்வருக்கும் 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக குற்றம் நடந்த சட்டன்பள்ளிக்கு குற்றவாளிகள் நால்வரும் காவலர்களால் இன்று அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்போது அவர்கள் தப்பி ஓட முயன்றதால் நால்வரையும் காவலர்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றார்கள். இச்சம்பவம் நாடு முழுக்கப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர்களின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகளும் விமரிசனங்களும் கிடைத்துள்ளன.


பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் கூறியதாவது: