செலவைக் குறைக்கலனா தலையில் துண்டுதான்... அரசுக்கே இந்த நிலையா

வரி வருவாய் குறைவாக இருப்பதால் இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களில் செலவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது.


கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நீடித்து வருகிறது. தனியார் முதலீடுகள் குறைந்ததால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.


ஜூலை - செப்டம்பர் காலாண்டில் வெறும் 4.5 சதவீத வளர்ச்சி மட்டுமே இருந்த நிலையில், அடுத்து வரும் காலாண்டுகளிலும் வளர்ச்சி இருக்காது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தித் துறை முடங்கி, வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளன.


ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு அரசின் வரி வருவாயும் போதுமானதாக இல்லை. நிலைமை இவ்வாறு இருப்பதால் இந்த ஆண்டில் அரசின் நிதிநிலை நெருக்கடியில் இருக்கிறது.