25 கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழல் நிலவுகிறது.
தொழிலாளர் பாதுகாப்புச் சட்டச் சீர்திருத்தத்தை மத்திய அரசு கைவிட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு நாளை (ஜனவரி 8) வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஸ்டீல், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.21,000 முதல் ரூ.24,000 வரையில் உயர்த்த வேண்டும்;
பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கக்கூடாது போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்து இப்போராட்டம் மிகப் பெரிய அளவில் நடத்தப்படவுள்ளது