வீடு, கார் வாங்குபவர்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு சிறப்புச் சலுகையாக வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக அவ்வப்போது சிறப்புச் சலுகைகளையும் வட்டிக் குறைப்பையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் புத்தாண்டை முன்னிட்டுத் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, external benchmark based rate (EBR) எனப்படும் வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் குறைத்து அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் 8.05 சதவீதத்திலிருந்து இப்போது 7.80 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் வாகனக் கடன், வீட்டுக் கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதங்கள் குறையும்.